Friday, January 13, 2017


பொங்கலோ பொங்கல்...

அறுவடை  கழிந்து  நெல் மாமலை  போல் குமிந்த காலம் எங்கே ..
ஊரெல்லாம் போரடித்து களைத்து  வந்த  பாடல்கள் எங்கே..
அறுவடை திருநாளில் தங்க நெல் மணிகள் எங்கே..

பின்னே எதனால் இந்த பொங்கல் கொண்டாட்டம் , 
யார் கொண்டாடும் பொங்கல்.

கடையில்  அரிசி வாங்கி பொங்கல் கொண்டாடி..
பொங்கலே என்னவரு  தெரியாமல் கொண்டாடும் பொங்கல்..
இதனை கொண்டாடுவது எதற்கு என்று பலமுறை என்னை கேட்டதுண்டு... 

அனால் இந்த வருடம், தலை நிமிர்ந்து கொண்டாட ஆசை படும் பொங்கல் ..
ஆம் இந்த வருடம் இது அறுவடை திருநாள் என்பதை விட,
தமிழர் ஒற்றுமைக்கு " விதைப்பு திருநாள் " என்று பார்க்கிறேன் ....

சில இளைஞர்கள் கலாச்சாரம் என்ன வென்று தெரியாவிட்டாலும்,
கலாச்சாரம் தீண்ட படுமாயின் , பொங்கி எழும் வெற்றி பொங்கல் ....

பொங்கல் என் பூமி தாயின் திருவிழா,
ஜல்லிக்கட்டு என் அடையாளம்...
தமிழர் ஒற்றுமை  ஓங்கி வளரும், 
அதன் வேரை அசைக்கமுடியாது,

என்ற அத்தனை நெஞ்சகளுக்கும்...

*    சீரிய தமிழர் ஒற்றுமை பொங்கல் நல் வாழ்த்துக்கள்    * 











Tuesday, January 10, 2017


உறக்கம்  


இளம் வெயில் உன்னை தீண்டித் தழுவ, 

உதிரம் உன்மேல் உலவிப் பருக,

வேகம் உன்னை சவாரித்தோட, 

கடமை உன்னை உந்திப்பெருக,  

பாசங்கள் உன்னை வருகைத் தேட,

இரவு மெத்தையில் கண்கள் தாலாட்டா, 


நான் தூங்கும் நேரம், 


நான் என்னை ரசிக்க தொடங்கும் நாளிகை ........... 

Monday, August 11, 2014

தமிழ் தூண்டல்...


அம்மா என்று கூப்பிடும் முன்னே என் சிணுகைகள் தேடிய உன் பதட்டங்கள்,

நீ ஏற்றிவிட்டு இத்தனை தூரம் போனேன் ஆனால் பாதைகல் உண்டானது உன் உதிரத்தால்,

என் வாழ்வை உறுதி செய்து உள்ளவரை உற்றவனாய் இருக்கும் என் பெருமானே,

உங்களை வணங்கி ஊ சுழி இடுகிறேன்................