பொங்கலோ பொங்கல்...
அறுவடை கழிந்து நெல் மாமலை போல் குமிந்த காலம் எங்கே ..
ஊரெல்லாம் போரடித்து களைத்து வந்த பாடல்கள் எங்கே..
அறுவடை திருநாளில் தங்க நெல் மணிகள் எங்கே..
யார் கொண்டாடும் பொங்கல்.
கடையில் அரிசி வாங்கி பொங்கல் கொண்டாடி..
பொங்கலே என்னவரு தெரியாமல் கொண்டாடும் பொங்கல்..
இதனை கொண்டாடுவது எதற்கு என்று பலமுறை என்னை கேட்டதுண்டு...
அனால் இந்த வருடம், தலை நிமிர்ந்து கொண்டாட ஆசை படும் பொங்கல் ..
ஆம் இந்த வருடம் இது அறுவடை திருநாள் என்பதை விட,
தமிழர் ஒற்றுமைக்கு " விதைப்பு திருநாள் " என்று பார்க்கிறேன் ....
சில இளைஞர்கள் கலாச்சாரம் என்ன வென்று தெரியாவிட்டாலும்,
கலாச்சாரம் தீண்ட படுமாயின் , பொங்கி எழும் வெற்றி பொங்கல் ....
பொங்கல் என் பூமி தாயின் திருவிழா,
ஜல்லிக்கட்டு என் அடையாளம்...
தமிழர் ஒற்றுமை ஓங்கி வளரும்,
அதன் வேரை அசைக்கமுடியாது,
என்ற அத்தனை நெஞ்சகளுக்கும்...
* சீரிய தமிழர் ஒற்றுமை பொங்கல் நல் வாழ்த்துக்கள் *
No comments:
Post a Comment